சீன அதிபருக்கு சால்வை, பட்டுப்புடவை பரிசு

சீன அதிபர் ஜி ஜின்பிங்-கிற்கு அவருடைய உருவப்படம் நெய்யப்பட்ட சால்வை, காஞ்சிபுரம் பட்டுபுடவை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

இரு நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தந்தார்.

மாமல்லபுரத்தில் மோடிவுடனான தனிப்பட்ட சந்திப்புக்கு பின்னர், காஞ்சிபுரத்தின் அடையாளமாக திகழும் பட்டுப்புடவை, கோவை கைத்தறி, கைவினை பொருட்களின் கண்காட்சி என மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.

அப்போது சீன அதிபருக்கு சிறப்பு செய்யும் வகையில் அவருடைய உருவம் நெய்யப்பட்ட கைத்தறி பட்டு சால்வை பரிசாக வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த நெசவாளர்கள் கைவண்ணத்தில் இந்த சால்வை உருவாக்கப்பட்டது. 6 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சிவப்பு நிற சால்வையில் தங்க நிறத்தில் சீன அதிபரின் உருவப்படம் மிகவும் தத்ரூபமாக நெய்யப்பட்டிருந்தது.

இத்துடன் சிவப்பு நிறத்தால் ஆனா காஞ்சிபுரம் பட்டுபுடவையும் சீன அதிபருக்கு மோடி பரிசாக வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே