மீண்டும் சர்ச்சை கிளப்பும் கனடா சிஷியை

நித்தியானந்தா, ஆபாச தகவல்களை அனுப்பியதாக கனடாவைச் சேர்ந்த பெண் குற்றம் சாட்டுகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா என்ற பெண் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக பேஸ்புக் மெசஞ்சரில் நித்தியானந்தா அனுப்பிய தகவல்களை வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டு உள்ள ஆதாரங்களில் சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அதில் தான் சிவன் எனக் குறிப்பிட்டுள்ள நித்தியானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?? என அந்த சிஷ்யை இடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கும் நித்தியானந்தா மீதான இந்த புதிய குற்றச்சாட்டு மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே