இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை எனில் உங்களுக்கு நல்ல சாவே வராது – அதிமுக வேட்பாளர்

மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள். இல்லையென்றால் நீங்கள் நல்ல சாவு சாவ மாட்டீர்கள்.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பரப்புரையில், அதிமுக – திமுக கட்சியினர் தான், ஒருவருக்கொருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நமக்கல்லில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பி.பி.பாஸ்கர், அதிமுகவினர் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள். இல்லையென்றால் நீங்கள் நல்ல சாவு சாவ மாட்டீர்கள் என சாபம் விட்டுள்ளார். இவரது பேச்சால், கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே