திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு – ஓபிஎஸ் விமர்சனம்..!!

திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதிபட்டி கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தொகுதிக்குட்பட்ட 14க்கும் மேற்பட்ட ஊர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், 2006-ம் ஆண்டில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிரைவேற்றவில்லை என்றார்.

தற்போதையை அதிமுக அரசு தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக விளங்கி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே