எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா பெயரில் கல்வெட்டு..!!

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்ட இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வை ஒட்டி கல்வெட்டு இன்று திறக்கப்பட்டது.

இந்த கல்வெட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில் அதிமுகவின் கொடியை சசிகலா ஏற்றியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றிய சசிகலா, பின்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே