கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழுஊரடங்கு தற்போது அமலுக்கு வந்ததுள்ளது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் 31.7.2020 வரை தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5..7.2020 மற்றும் 12 .7.2020 மேலும் 19.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளும் குணமடைந்து வருகினறனர்.
ஆனால் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் கடைகள் எல்லாம் அடைக்கபட்டது. மேலும் வேளைக்கு சென்றவர்கள் தங்களுக்கு இல்லத்திற்கு வீடு திரும்பினர்.
என்னவெல்லாம் செயல்படும்:
- மருத்துவம், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஊரடங்கை மீறி, வெளியில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக் கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது.
- கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.