“சீனா ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்” – ப.சிதம்பரம் கேள்வி…!!!

இந்திய சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடன் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று, பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், ‘சீனப் படைகள் இந்தியாவுக்குள் ஊடுறவில்லை. இந்தியவீரர்கள் சீன வீரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர்’ என்று பதிலளித்தார். பிரதமர் மோடியின் விளக்கம் தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

இதுகுறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில்,

“சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை?

எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.

— P. Chidambaram (@PChidambaram_IN) June 20, 2020

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே