“முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வராது” வந்தாலும் உடனே போய்விடும்..!!அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட முதல்வருக்கு கொரானா வராது வந்தாலும் அது உடனே சென்றுவிடும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுரையில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை என்றால், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் அது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்தார். பொதுமக்கள், நோய் வராது என்று தைரியமாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் கடந்த சில நாட்களாக வெளியே வராதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “முதல்வருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜெயலலிதா இருந்தால் எப்படி கருணையும் பாசத்தோடும் இருப்பாரோ அதுபோல எடப்பாடி பழனிசாமியும் உள்ளார்; முதல்வர் எங்களுக்கு வழிகாட்டியாய், முன்மாதிரியாய் உள்ளவர். சக அமைச்சர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர். முதல்வருக்கு கொரானா வராது. வந்தாலும் அது உடனே போய்விடும்” இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒபிசி இட ஓதுக்கீடு விவகாரத்தில் திமுக சொந்தம் கொண்டாடுவது யார் பெற்ற பிள்ளைக்கு யார் பேர் வைப்பது போல உள்ளது என சாடினார். மேலும் அரசுக்கு கிடைத்த இந்த வெற்றியை நல்ல மனம் இல்லாததால் ஸ்டாலினுக்கு பாராட்ட மனம் வரவில்லை கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே