5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.

இதனையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதனை தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து சுனில் அரோரா தலைமையில், டெல்லியில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே