“ஆர்ச்சர் பந்தில் பண்ட் ஆடிய ரிவர்ஸ் ஸ்வீப்பை பார்த்து அசந்து போனேன்” – சஞ்சய் பங்கார்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட், ஆர்ச்சர் பந்தில் ஆடிய ரிவர்ஸ் ஸ்வீப்பை பார்த்து அசந்து போனதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். வழக்கமாக ரிவர்ஸ் ஸ்வீப் மாதிரியான ஷாட்களை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ஆடுவர். ஆனால் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அசத்துகிறார்.

“140-150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக அதுபோன்ற ஒரு சிக்ஸர் விளையாடுவதெல்லாம் கடினம். அதிலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் இந்த மாதிரியான ஷாட் ஆடுவதெல்லாம் பாராட்டத்தக்க ஒன்று. அவரது திறனை பார்த்து நான் ஆச்சரியத்தில் அசந்து போனேன்” என பங்கார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே