அமமுக- தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிக 65 முதல் 70 தொகுதிகள் வரை ஒதுக்க கேட்டுள்ளதாக தகவல்கள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்டது தேமுதிக. ஆனால் அதிமுகவோ அத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியாது என தெரிவித்துவிட்டது.

இதையடுத்து பாமகவுக்கு ஒதுக்கியது போல் 23 அல்லது 25 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டது.

ஆனால் அதிமுகவோ 14 முதல் 18 வரை மட்டுமே கொடுக்க முடியும். அதற்கு மேல் ஒரு சீட்டு கூட கொடுக்க இயலாது என சொல்லிவிட்டது.

இதையடுத்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுவதாக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாக தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் அமமுக- தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமமுக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதனால் தேமுதிக தனித்து களம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அமமுக- தேமுதிக இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்களுக்கு 65 முதல் 70 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யுமாறு அமமுகவிடம் தேமுதிக கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை 6.30 மணிக்கு அமமுக- தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படுகிறது.

தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இன்று மாலையே தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே