எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது; நான் மாட்டமாட்டேன் – ரஜினி திட்டவட்டம்

பாஜகவின் நிறத்தை தனக்கு பூச முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் ஆனால் தனக்கு காவிச் சாயம் பூசும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது என்றும் திட்டவட்டமாக ரஜினி கூறியுள்ளார். 

சென்னையில் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது திருவள்ளுவரை முன்வைத்து சர்ச்சைகள் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய ஞானி, சித்தர் என்றும் அவர் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

நாட்டில் மக்களுக்கான பிரச்சனைகள் எவ்வளவோ உள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, இதைப் பற்றி பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே