தமிழகத்தில் ஆளுமை மிக்க, சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தமக்கு சிலர் காவி சாயம் பூச நினைத்தாலும் அது எடுபடாது என்றார்.
அதேசமயம் இன்றைய அரசியலில் இது சகஜம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது நிலைப்பாட்டை மட்டுமல்ல எப்போதுமே வெளிப்படையாகத் தெரிவிப்பதுதான் தமது வழக்கம் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
திருவள்ளுவருக்கு காவி உடை விவகாரத்தை ஊடகங்களே பெரிதாக்கிவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆகும் வரை நடித்தார் என குறிப்பிட்ட ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளுமை மிக்க, சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.