“கட்சிக்கு எதிராக நான் பேசவில்லை” ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட் பேச்சு

காங்., தலைமை சமாதானம் செய்தததை தொடர்ந்து, 30 நாட்களுக்கு பின் ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட் ‘கட்சிக்கு எதிராகவும், கட்சித் தலைமைக்கு எதிராகவும் நான் எதுவும் பேசவில்லை’ என தெரிவித்தார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நிகழ்ந்து வரும் மோதலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், நேற்று காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு ராஜஸ்தான் அரசியலில் நிலவிய குழப்பத்தில் மாற்றத்தை உண்டாக்கியது.

சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னையை விவாதிக்க 3 பேர் கொண்ட குழுவை நியமிக்க சோனியா முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சச்சின் பைலட் 30 நாட்களுக்கு பின் ஜெய்ப்பூர் திரும்பினார். 

பைலட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘நான் கட்சிக்கு எதிராகவும், கட்சித் தலைமைக்கு எதிராகவும் எதுவும் பேசவில்லை. எனக்கு பதவி வேண்டும் என கேட்டும் போராடவில்லை.

என்னை பற்றி பலர் புரளியை கிளப்பி விட்டனர். கட்சியின் செயல்பாடுகளுக்காக தொடர்ந்து நான் குரல் எழுப்புவேன்’ என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே