BSNL ஊழியர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள்; BSNL தனியார் மயமாக்கப்படுவது உறுதி – BJP எம்.பி

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடத்தை சேர்ந்தவர் பா.ஜ.க எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே. நேற்று அந்த பகுதியில் உள்ள கும்தாவில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்வில் பேசிய அவர் ‘பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணிபுரியும் 88000 ஊழியர்களை பணி நீக்கப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘சுமார் 88000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்ற பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அதன் தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த எதுவும் அவர்கள் செய்யவில்லை. 

இந்த பகுதியிலாவது (உத்தர கன்னடா) நீங்கள் குறைந்தபட்சம் ஓரளவுக்கு மொபைல் கவரேஜைப் பெறலாம், ஆனால் பெங்களூரு உட்பட பல இடங்களில் உங்களுக்கு கவரேஜ் கிடைக்காது.

வேலை செய்ய போதுமான ஆட்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்ற சூழலில் அவர்கள் வேலை செய்யத் தயாராக இல்லாதது தான் இதற்கு காரணம். அவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள்.

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள இந்தத் துறை.

வரவிருக்கும் நாட்களில் நாங்கள் 88000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளோம்.

பின்னர் பி.எஸ்.என்.எல்லை தனியார்மயமாக்கி அதை மீண்டும் ஒழுங்கு நிலைக்கு கொண்டு வர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே