மகாராஷ்டிராவில் இன்று (ஆகஸ்ட் 11) 11,088 பேருக்கு கொரோனா; 256 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 11,088 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அங்கு புதிதாக 11,088 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 256 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,35,601 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பலி எண்ணிக்கை 18,306 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் அங்கு 1,48,553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,634 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,295 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, வெறும் 81 பேர் மட்டும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே