இனி அரசியல் ஆலோசகராக பணியாற்றப் போவதில்லை – பிரசாந்த் கிஷோர் முடிவு..!!

மேற்கு வங்க தேர்தல் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுவரும் நிலையில், அந்த வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரசாந்த் கிஷோர் இந்தியா டுடே ஆங்கில செய்தி சானலுக்கு அளித்த பேட்டியில், நான் நீண்ட காலமாக விலகுவதற்கு எதிர்பார்த்து வந்தேன்.

இப்போது அந்த வாய்ப்பு மேற்குவங்கம் கொடுத்துள்ளது என்றார்.

முன்னதாக,மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 100 இடங்களைத் தாண்டினால் விலகுவதாக அவர் முன்பு கூறியிருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே