ஹரியானாவில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு..!!

நாட்டை அச்சுறுத்தி வரும் COVID-19 தொற்றின் கொடிய இரண்டாவது அலையை தடுக்க ஹரியானா அரசு நாளை முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மாநில உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர் அனில் விஜ் வெளியிட்டுள்ளார். 125 பேர் உயிரிழந்ததுடன் 13,588 புதிய தொற்றுகள் நேற்று பதிவாகியுள்ளன.

மாநிலத்தில் இதுவரை 5,01,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

குர்கான், ஃபரிதாபாத், பஞ்ச்குலா, சோனிபட், ரோஹ்தக், கர்னல், ஹிசார், சிர்சா, மற்றும் ஃபதேஹாபாத் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை அரசு வார இறுதி ஊரடங்கை அறிவித்தது. இந்த மாவட்டங்கள் மாநிலத்தின் COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிக பங்களிப்பு செய்கின்றன.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அதிகாரிகளிடம் கறுப்பு சந்தைப்படுத்துதல் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் அல்லது கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வைரஸ் தடுப்பு ஊசி ஆகியவற்றில் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.

படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலையில், டெல்லியை விட மாநிலத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே