அறுதி பெரும்பான்மைக்குத் தேவைப்படும் இடத்தை விட, அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 148 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னலை வகித்து வருகிறது.

திமுக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், அதற்கு கூடுதலாக 30 தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது.

இதையடுத்து திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

இதையடுத்து பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே