பாஜகவினரை சட்டமன்றத்துக்கு அனுப்பும் பணிகளை செய்கிறேன் – எல்.முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருகிறது. தேசிய கட்சிகளாகவே இருந்தாலும் கூட திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் தான் தமிழகத்தில் இருக்கிறது.

அதோடு அரசியலில் பெரும்பங்காற்றிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் பாஜக, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், ‘2021 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை.

தனது சகோதர, சகோதரிகளான பாஜகவினரை சட்டமன்றத்துக்கு அனுப்பும் வேலையை தான் செய்கிறேன்’ என தெரிவித்தார்.

அதாவது, தான் பதவிக்கு ஆசைப்படவில்லை, பாஜகவின் தலைவனாக மட்டுமே செயல்படுகிறேன் என குறிப்பால் உணர்த்தியுள்ளார் எல்.முருகன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே