தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டாக உயர்த்தி உயர்த்துமாறு சட்டப்பேரவையில் முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது, அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்த சட்டமசோதாக்களும், தமிழகத்தின் துணை பட்ஜெட் உள்ளிட்ட முக்கிய விவரங்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் வர தட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டாக உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
பெண்களை பின்தொடருவோருக்கான தண்டனையை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்த வேண்டும் என்றும்; 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு வழிபடுத்தினால் ஆயுள்தண்டனை தரவும் பரிந்துரைத்துள்ளார்.
வரதட்சணை கொடுமைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.