ஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா, மும்பை – பஞ்சாப் அணிகள் மோதல்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன, இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும், மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அவற்றில் ஹைதராபாத் அணி போட்டிகளிலும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அவற்றில் மும்பை அணி 14 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே