அரியர் தேர்ச்சி விவகாரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
அவை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில், தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதாவது, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி காத்திருந்த மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அரியர் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், கல்வியாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலை கழகம் தவிர்த்து மற்ற கலை அறிவியல் பல்கலை கழகங்கள் இந்த ஒப்புதல் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி குறித்து அண்ணா பல்கலை கழகம் முடிவெடுக்கவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரைச் சென்றது.
அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ஆலோசிக்க, ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில், ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.