இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை நெருங்குகிறது..!!

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் எண்ணிக்கை 74 லட்சத்து 94 ஆயிரத்து 552 ஆக அதிகரித்தது.

தொற்றில் இருந்து இதுவரை 65 லட்சத்து 97 ஆயிரத்து 209-க்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 61,871 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,94,552-ஆக அதிகரித்தது.

அதே கால அளவில் 72,614 பேர் குணமடைந்தனா்.

இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 65,97,209-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 1033 பேர் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக அதிகரித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 17-ஆம் தேதி வரை 9,42,24,190 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிமழை ஒரே நாளில் மட்டும் 9,70,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒன்றரை மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக 8 லட்சத்தைவிட குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 7,83,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கு முன்பு, கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி, 7,85,996 பேர் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து 10-ஆவது நாளாக, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே