உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீம்கான் பகுதியில் உள்ள முத்தியா கிராமத்தில் வசித்து வந்தவர் சரோஜினி தேவி (34), அவரது கணவர் மூல்சந்த். குடும்ப தகராறு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்துள்ளனர். சரோஜினி.
இதனிடையே கிராமத் தலைவரின் ஆலோசனையின் படி மீண்டும் புதன்கிழமை கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை தம்பதியரிடையே மீண்டும் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.
சரோஜினி தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.
மூல்சந்த் அதை அவமானமாகக் கருதி சரோஜினியை அடித்து, அவளின் மூக்கை கடித்து மென்று துப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீம்கான் காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நீம்கான் காவல் நிலைய அதிகாரி கூறுகையில்,
குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஜபிசி பிரிவு 326 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணை காயப்படுத்திய குற்றத்திற்காக அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.