திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தற்கொலை..!!

தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. ஊடக விவாதங்களில் பங்கேற்று பேசி வருவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடி எடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி நதியா இன்று காலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழன் பிரசன்னாவிற்கும் நதியாவிற்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிகிறது. 35 நதியாவிற்கு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அதனை தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் சண்டை ஏற்படவே அவர் தனது வீட்டிற்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நதியாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே