தவறான நட்பு, கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கணவர்

அலுலகத்திற்குள்ளேயே நடிகையின் கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தவறான நட்பு, கடன் பிரச்சனை போன்றவை காரணமாக கூறப்படும் இந்த தற்கொலை விவகாரத்தின் பின்னணியை பார்க்கலாம்.

சென்னை அண்ணாநகரில், தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து, காலையில், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

திறந்திருந்த அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே அந்த நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்துள்ளார். 

காலை நேரத்தில் இந்த பயங்கர காட்சியைப் பார்த்து அதிர்ந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார், கோபிநாத்தின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

கோபிநாத்துக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார்.

ரேகா, தொலைக்காட்சித் தொடர்களில்  நடிகையாக நடித்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்புதான், இந்த விளம்பர நிறுவனத்தில் கோபிநாத் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அப்போது கோபிநாத்துக்கும், வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது, ரேகாவுக்கு தெரியவந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கோபிநாத்துக்கு கடன் பிரச்சினைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

சம்பவ தினத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

எனவே வீட்டிலிருந்து வெளியேறி அலுவலகத்திற்கு வந்துள்ளார். மேலாளர் என்பதால், அவரிடம் ஒரு சாவி இருந்துள்ளது.

எனவே அலுவலகத்தை திறந்து அங்கு அமர்ந்திருந்த கோபிநாத், பின்னர் திடீரென அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

எனினும், கோபிநாத்தின் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே