“போண்டாவில் பிளேடு” – சப் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி..!!

நிலக்கோட்டை அருகே குழந்தைக்காக வாங்கிய போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கனகராஜ் என்பவருக்கு ஒரு மகனும், 2 பேத்திகளும் இருக்கிறார்கள்.

கனகராஜ் தனது பேத்திகளுக்காக, தான் வசித்து வரும் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு எதிரே உள்ள கடை ஒன்றில் போண்டா வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.

அதனை பேத்திகளிடம் கொடுத்த கனகராஜ், ஒரு போண்டாவில் பிளேடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கனகராஜ் தகவல் கொடுக்க, உடனே அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, போண்டா போட்ட தொழிலாளி ஆஜாக்கிரதையுடன் செயல்பட்டது தெரிய வந்ததையடுத்து அவர்களை அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.

முன்னதாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குழந்தைக்காக வாங்கப்பட்ட சாக்லேட் ஒன்றில் பீடி துண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே