ஐதராபாத் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரையும் தெலங்கானா போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஐதராபாத்தில் கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் இரவு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பழுதடைந்துள்ளது.
அப்போது அங்கு வந்த 4 பேர் பைக்கை சரிசெய்வதாக கூறி நடித்து அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரை எரித்து கொலை செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாய் நகர் போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடினர்.
சந்தேகத்தின் அடிப்படையில் லாரி கிளினர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து நடித்து காட்ட சொல்லி உள்ளனர்.
அப்போது கைதான 4 பேரும் போலீசாரிடம் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
அதை தொடர்ந்து 4 பேரையும் தெலங்கானா போலீசார் 4 பேரையும் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.