தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நீலககந்த பானு. 20 வயது இளைஞரான இவர், டெல்லி பல்கலைக்கழகம் ஸ்டீபன் கல்லூரியில் கணிதப்பாடத்தை தேர்வு செய்து பயின்று வருகிறார்.

லண்டனில் கடந்த 15 ஆம் தேதி மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்டில் நடந்த மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீலககந்த பானு கலந்துக்கொண்டார்.

இதில் சிறப்பாக விளையாடிய இவர், உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

அதாவது இப்போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை நீலகண்ட பானு பிரகாஷ் பெற்றுத்தந்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ‘உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்’ என்ற பட்டத்தையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் 13 நாடுகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். அதில் நீலகண்ட பானு பிரகாஷ் முதலிடத்தையும், லெபனான் போட்டியாளர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தனது சாதனை தொடர்பாக நீலககந்த பானு கூறுகையில், இந்தச் சாதனைகளுக்கு கணித மேதைகளான ஸ்காட் ஃபிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி ஆகியோரே முக்கிய காரணம் என்றார்.

எனது மூளை, ஒரு கால்குலேட்டரின் வேகத்தை விட விரைவாக கணக்கிடுகிறது. உலக அளவிலான கணிதத்தில் இந்தியாவை நிலைநிறுத்த நான் முயற்சி செய்தேன்.

நான் பங்குபெற்ற இந்த போட்டி, உடல்ரீதியான மற்ற விளையாட்டுகளுக்கு சமமானது. எனது திறனை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.

என்னை போல் மற்ற குழந்தைகளுக்கும் கணிதம் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே