நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதுவோர் தங்களது உடல்நலன், எதிர்காலம் பற்றி அச்சமடைந்துள்ளனர் – ராகுல் காந்தி

நீட்-ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் உடல்நலன் மற்றும் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“நீட் – ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது உடல்நலன் மற்றும் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்.

அவர்களுக்கு கரோனா தொற்று அச்சம், தொற்று காலத்தில் போக்குவரத்து மற்றும் தங்குமிடம், அசாம் மற்றும் பிகாரில் வெள்ளம் உள்ளிட்ட நியாயமான பிரச்னைகள் உள்ளன.

மத்திய அரசு அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டு அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வைக் கண்டறிய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் மாணவர்களுக்கு எதிரான மோடி அரசு என்ற ஹேஷ்டேக்கையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

ஏற்கெனவே அறிவித்ததன்படி ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே