தமிழகத்தின் 10 மாவட்ட தலைநகரங்களில் ரூ.20 கோடி செலவில் மிக பிரமாண்டமாக சந்தைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் முதல்வர் எடப்பாடி பேசும்போது, அதிமுக ஆட்சியை கலைப்பதற்காக திமுக எத்தனையோ சதிகளை செய்து பார்த்தது.
ஆனால் அவை அனைத்தும் தவிடு பொடியானது. நமது விவசாயிகள் இரவு, பகல் என்று பாராமல் பூமியில் இரத்தம் சிந்தி உழைத்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்வில் சிறந்து விளங்குவதற்காக ரூ.20 கோடியில் 10 மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகளின் நலனுக்காக பிரமாண்ட சந்தைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.