பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

பெப்பர் சிக்கன் நீங்கள் ஈஸியா செய்யக்கூடிய சிம்பிளான சுவையான ரெசிபி. குறைவான மிதமான தீயில் சமைக்கும் போது கிடைக்கும் இந்த ருசியான ஜுஸியான சிக்கன் நீங்கள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒரு டிஷ். ஒருமுறை சுவைத்துப் பார்த்தால் நீங்க நிச்சயமாக இதன் சுவைக்கு அடிமையாகி விடுவீங்கன்னு நாங்கள் சவால் விட்டு சொல்கிறோம். இதில் பர்ஃபெக்டாக சேர்க்கப்படும் தக்காளியும் மசாலாக்களும் இதற்கு அதிக சுவை சேர்க்கின்றன. நீங்க ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ல தென்னிந்திய பெப்பர் சிக்கன் செய்முறையை தேடுறீங்களா..? அப்படின்னா இத படிச்சு அந்த ரெசிபியை தெரிஞ்சிக்கோங்க. இந்த ரெசிபியை செய்ய ரொம்ப கடினமான சமையல் முறையெல்லாம் தேவையில்லைங்க. சில சிம்பிளான பொருட்களை கொண்டே இந்த ரெசிபியை நீங்க செய்யலாம். எப்படி செய்றதுன்னு இங்கே படிச்சி தெரிஞ்சிக்கோங்க.
முக்கிய பொருட்கள்
500 கிராம் chicken
பிரதான உணவு
1 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
2 Numbers நறுக்கிய வெங்காயம்
2 Numbers தக்காளி
3 Numbers பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
1 1/2 தேக்கரண்டி மிளகு
1/4 கிராம் மஞ்சள்
தேவையான அளவு உப்பு
How to make: பெப்பர் சிக்கன் செய்வது எப்படி
Step 1:
ஒரு பேனை எடுத்து அதில் எண்ணெய் சேர்த்துக்கோங்க. எண்ணெய் சூடேறியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்க. இப்போது அதில் நறுக்கிய தக்காளிகளை சேர்த்து கிளறி விடுங்க.
Step 2:
கடாயிலிருக்கும் வெங்காயமும் தக்காளியும் சீக்கரமா வேக அதில் உப்பை சேர்த்துக்கோங்க. 4 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடுங்க.
Step 3:
இஞ்சி – பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூளையும் பேனில் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து விடுங்க. இப்போது இந்த கலவையை 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைங்க. அதன் பின் கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும்.
Step 4:
பேனின் மூடியை மூடி சிக்கனிலுள்ள சாறு முழுசா வற்றிப் போய் சிக்கன் மென்மையாகும் வரை வேக வெச்சுக்கோங்க. கேஸை ஆஃப் பண்ணிட்டு, இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றோடு
சைட்டிஷ்ஷாகபரிமாறுங்க.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே