தேவையான பொருட்கள்:

புதிய காஃபி பவுடர் (சிக்கரி கலந்தது) – 3 மேசைக் கரண்டி,
பால் – ஒன்றரை கப்,
சர்க்கரை: – அரை தேக்கரண்டி,
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.

அதில் மூன்று மேசைக் கரண்டி காஃபி பவுடரை பில்டரில் போட்டு மெதுவாக அழுத்தவும்.

உடனடியாக வெந்நீரை அதில் ஊற்றி முடவும்.

அரை மணி நேரத்திற்குப் பின்பு ஸ்ட்ராங்கான டிகாஷன் தயார்

ஒன்றரை கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும்.

அரை கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில் விடவும்.

அதில் 4/3 கப் பாலும், அளவுக்கேற்ப சர்க்கரையும் சேர்த்து நுரை பொங்க ஊற்றி கலக்கவும்.

கும்பகோணம் டிகிரி காபி தயார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே