நாக்கில் எச்சில் ஊறும் இன்ஸ்டண்ட் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி

தயிர் சாதமும் தொட்டுக்க ஊறுகாயும் இருந்தால் போதும் எவ்வளவு சாப்பிட்டாலும் அடங்காது. அந்தளவுக்கு இந்திய உணவுகளில் ஊறுகாய்க்கு என்று தனி இடம் உண்டு. அதிலும் தொட்டதும் சப்பு கொட்ட வைப்பதில் எலும்பிச்சை ஊறுகாய்க்கு தான் முதலிடம். அதன் புளிப்பு சுவையும் காரசாரமான மசாலா கலவைகள், உப்பு என்று சுவை கூடிக் கொண்டே செல்கிறது. வீட்டில் குழம்பு, கூட்டுக்கு எதுவுமோ இல்லையென்றால் கூட இந்த எலும்பிச்சை ஊறுகாய் ஒன்றே போதும்.பொதுவாக எலும்பிச்சை ஊறுகாய் செய்ய வேண்டும் என்றால் நீண்ட நாட்கள் பிடிக்கும். லெமனை ஊற வைத்து மசாலாக்கள் தூவி என்று இரண்டு நாட்களாவது ஆகும். ஆனால் இங்கே உடனடி எலும்பிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்று சொல்லப் போகிறோம். இந்த ரெசிபியின் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே சில மணி நேரங்களில் ஊறுகாய் தயாரிக்க முடியும். உடனடியாக ஊறுகாய் செய்து நீங்கள் சுவைக்கலாம். பாட்டிலில் அடைத்து வைத்து கூட நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். சரி வாங்க இந்த உடனடி எலும்பிச்சை ஊறுகாயை எப்படி செய்யலாம்.

முக்கிய பொருட்கள்
6 Numbers நறுக்கிய எலுமிச்சை
பிரதான உணவு
1 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
தேவையான அளவு மிளகாய் பொடி
தேவையான அளவு உப்பு
How to make: நாக்கில் எச்சில் ஊறும் இன்ஸ்டண்ட் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி
Step 1:
ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய லெமனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
Step 2:
மற்றொரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள்.
Step 3:
லெமன் நன்றாக மென்மையாக வெந்ததும் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். 5-6 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும் .
Step 4:
இப்பொழுது காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறுங்கள். எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்காதீர்கள். இது உங்கள் ஊறுகாயை கெட்டுப் போக வைத்து விடும்.
Step 5:
இப்பொழுது பொடித்த வெந்தய கடுகு பவுடரை சேர்த்து நன்றாக கிளறுங்கள். 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
Step 6:
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு லெமன் ஊறுகாயை காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது தயிர் சாதம், ரொட்டி, பழைய சாதம், சப்பாத்திக்கு என்று தொட்டு சாப்பிடலாம். இதன் புளிப்பும் காரச் சுவையும் உங்களுக்கு பிடிக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே