வீட்டிலேயே வெனிலா சாக்கோ சிப் குக்கீஸ் எப்படி செய்யலாம்

உங்கள் வீட்டில் இருக்கும் அன்பான குழந்தைகள் மற்றும் கணவருக்கு வீட்டில் தயாரித்து தரக் கூடிய ஒரு சுவையா குக்கி வெண்ணிலா சாக்கோ – சிப்ஸ் குக்கி. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான , மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வெண்ணிலா மற்றும் சாக்லேட் அருமையாக இணைந்து தரும் சுவை அலாதியாக இருக்கும். இது ஒரு மிகச்சிறந்த கலவையாகும். வாருங்கள் ! இன்னும் தாமதிக்காமல் இதனைத் தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொள்வோம்.
முக்கிய பொருட்கள்
1 கப் மைதா மாவு
பிரதான உணவு
6 தேக்கரண்டி தூள் சர்க்கரை
5 தேக்கரண்டி உருகி வெண்ணெய்
3 தேக்கரண்டி சாக்லேட் சிப்ஸ்
1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி பால்
1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
How to make: வீட்டிலேயே வெனிலா சாக்கோ சிப் குக்கீஸ் எப்படி செய்யலாம்
Step 1:
ஒரு கிண்ணத்தில் மேலே குறிப்பிட்ட அளவு பட்டர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். இரண்டையும் நன்றாகக் கலக்கவும் . இந்த கலவையில் மைதா சேர்த்து அதனுடன் பேக்கிங் பவுடர் , வெண்ணிலா எசன்ஸ், சாக்கோ சிப்ஸ் மற்றும் பால் சேர்க்கவும்.
Step 2:
எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து மாவு போல் செய்து கொள்ளவும். மாவு மிருதுவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
Step 3:
மாவை சப்பாத்தி மாவு போல் உருட்டி பின்பு அதனை தட்டையாக தட்டிக் கொள்ளவும் . உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குக்கியின் வடிவத்தை செய்து குக்கி கட்டர் மூலம் வெட்டி எடுக்கவும். 1
Step 4:
10 நிமிடம் ஓவனை சூடாக்கிக் கொள்ளவும். பிறகு மைக்ரோவேவ் ட்ரேயில் குக்கியை வைத்து ஓவனில் வைக்கவும். குக்கி சமைக்கப்பட்டவுடன் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
Step 5:
மாலை வேளையில் தேநீர் அல்லது இதர சிற்றுண்டிகளுடன் இதனை பரிமாறி மகிழலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே