பச்சை கொண்டைக்கடலையில இவ்ளோ டேஸ்ட்டா கிரேவி பண்ணலாமா

பச்சை கொண்டைக்கடலை ரெசிபி பொதுவாக இந்தியாவில் வட மாநிலப் பகுதிகளில் குளிர்காலங்களில் செய்யப்படும் ஒரு சீஸன் ரெசிபி. இந்த ரெசிபி ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் அதிக புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. கொண்டைக்கடலையில் சோடியம் இல்லை என்பதால், ஹெல்தியான உணவாகத் தேர்ந்தெடுக்க இது சிறந்த ஆப்ஷனாகும். மேலும் இதை சமைக்க அதிக நேரமும் எடுக்காது. இந்த ரெசிபியை ரொட்டி, பராத்தா, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதத்துடன் உங்கள் விருப்பத்திற்கேற்ப தொட்டுக் கொள்ளலாம். கொண்டைக்கடலை மெல்லிய இனிப்பான, மிருதுவான ஒரு பருப்பு வகை. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
முக்கிய பொருட்கள்
1 கப் பச்சை கொண்டைகடலை
1 கப் நறுக்கிய வெங்காயம்
பிரதான உணவு
3/4 கப் தயிர்
1 தேக்கரண்டி பூடு
1 தேக்கரண்டி இஞ்சி
தேவையான அளவு சிவப்பு மிளகாய்
தேவையான அளவு உப்பு
2 தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
தேவையான அளவு வெட்டிய துண்டுகள் பச்சை மிளகாய்
வெப்பநிலைக்கேற்ப
1 தேக்கரண்டி சீரகம்
தேவையான அளவு மஞ்சள்
2 தேக்கரண்டி நெய்
How to make: பச்சை கொண்டைக்கடலையில இவ்ளோ டேஸ்ட்டா கிரேவி பண்ணலாமா
Step 1:
பச்சைக் கொண்டைக் கடலையை கொஞ்சம் லேசாக இடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பானில் நெய் சேர்த்து சூடு பண்ணிக் கொள்ளவும். இப்போது அதில் சீரகம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
Step 2:
வெங்காயம் பொன்னிறமானதும், மசித்த கொண்டைக்கடலையை சேர்த்து அதோடு பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்கு கலந்து விட்டு வேகவிடவும்.
Step 3:
மசாலா பொருட்கள் நன்கு வெந்து கடாயில் எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடுங்கள். தேவைப்பட்டால் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேடவிடவும்.
Step 4:
இந்த சுவையான கிரேவியை பராத்தா, ரொட்டி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே