தமிழக ரேங்க் பட்டியலில் பிற மாநிலத்தவர் பெயர்கள் வந்தது எப்படி? மு.க.ஸ்டாலின் கேள்வி

தரவரிசை பட்டியல் தயாரிப்பதில், முறைகேடு நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.

இன்று தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், பிற மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழக மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பிற மாநில மாணவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

ஒரே நேரத்தில், பிற மாநில பட்டியலிலும், தமிழக பட்டியலிலும் ஒரே மாணவரின் பெயர் எப்படி இடம்பெற முடியும் என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பதில், முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே