மத்திய பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பு அமைச்சகம் என்ற புதிய துறை உருவாக்கம்..!!

பசுக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக பசு பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கப்படுவதாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை அறிவித்தார்.

மத்திய பிரதேசத்தை பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பசுக்களுக்கென தனியாக அமைச்சம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த அமைச்சகத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல் கூட்டம் நவம்பர் 22 ஆம் தேதி, அகர் மால்வாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே