எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்ணியம் தவறி விட்டனர்; நிதிஷ் குமார் கண்டனம்..!!

விவசாய மசோதக்கள் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:

விவசாய மசோதா வேளாண்மைத் துறைக்கு அவசியமானது.

மாநிலங்களவையில் அதனை நிறைவேற்றிய போது அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டனர்.

இது நாடாளுமன்றத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகும்.

அவைத்தலைவர் இருக்கைக்கு முன் சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்று ஆவணத்தை கிழிப்பது உள்ளிட்ட கண்ணியக் குறைவான வேலைகளில் ஈடுபட்டது கண்டிக்கத் தக்கது.

அவர்களின் செயல்கள் தவறானவை, கண்டனத்துக்குரியவை. 

ஆகவே அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே.

இவ்வாறு கூறினார் நிதிஷ் குமார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே