கொரோனா நிவாரணம் : மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி

மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இந்தியாவில் கொரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,567 ஆக உயர்ந்துள்ளது.

72 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 1039922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 55170 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரொனா பாதிப்பைக் குறைக்கும் வகையில்,பிரதமர் மோடி வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.

எஸ்.டி.ஆர்.எம்.எஃப் இன் கீழ் ரூ .11,092 கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் வெளியிட உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் இன்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான, மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்தின், முதல் தவணை பங்கான 11,092 கோடி ரூபாய் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்படுதல் வசதிகள், மாதிரி சேகரிப்பு மற்றும் ஸ்க்ரீனிங் ஆகியவற்றை செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

கூடுதல் சோதனை ஆய்வகங்களை அமைத்தல், நுகர்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தல், சுகாதாரத் துறை, நகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது, அரசு மருத்துவமனைகளுக்கான தெர்மல் ஸ்கேனர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் நுகர்பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சகம் மொத்தம் ரூ .17,287 கோடியை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதில்தான், ரூ .11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 14 மாநிலங்களுக்கு ரூ .6,195 கோடி ‘வருவாய் பற்றாக்குறை நிதி மானியமாக’ ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் கீழ் தமிழகத்திற்கு, 51,000 கோடி கிடைக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே