பிரதமர் இன்று காலையில் பேசிய பேச்சை தாம் அதிகம் எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் எதுவும் இல்லாமல் என்றோ நாம் கையில் எடுத்த டார்ச்சை அவர் இன்றுதான் கையிலெடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்புகள் தென்பட ஆரம்பித்தவுடன் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிக்கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில் மார்ச் 19 அன்று தொலைக்காட்சியில் முதன்முறையாக பேசிய பிரதமர் 22 அன்று மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் அழைப்புக்குப்பின் முதன்முதலாக நாடுமுழுதும் ஊரடங்கு அமலானது.
பின்னர் மீண்டும் பேசிய பிரதமர் 24-ம் தேதிமுதல் 21 நாட்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர் பேரிடர் மேலாண் சட்டம் அமலானது. நாடுமுழுதும் அனைத்துக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மீண்டும் பேசுகிறார் என்றவுடன் அனைவரும் ஏதோ மீண்டும் பிரச்சினை வரப்போகுது என எதிர்ப்பார்த்தனர்.
இந்நிலையில் இன்று காலை பேசிய பிரதமர் தனது பேச்சில் புதிய அறிவிப்பு எதுவும் இல்லாமல் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கணைத்து செல்போன் டார்ச்சுகள், அகல் விளக்கு ஏற்றி ஒற்றுமையை காக்க கேட்டுக்கொண்டார்.
பிரதமர் தனது பேச்சில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைமக்கள் குறித்து ஏதாவது சொல்வார் என எதிர்ப்பார்த்து ஏமாற்றமடைந்தோம் என பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த முறை நிதியமைச்சரின் சலுகைகளுக்கு பிரதமரையும், நிதியமைச்சரையும் பாராட்டியிருந்த கமல் இம்முறை விமர்சித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு :