அதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று முகேஷ் குமார் பிரஜாபட் என்பவர் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக அவரை இரண்டு போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்பிறகு கீழே விழுந்து கிடக்கும் அந்த நபரின் கழுத்தை போலீசார் தனது முட்டிக்காலால் நெறித்து அவரை சரமாரியாக தாக்குகிறார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனினும் இந்த விவகாரத்தில் முதலில் முகேஷ் குமார் தான் முதலில் காவலர்களை அறைந்ததாகவும், தொடர்ந்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் பிரதாப் நகர் காவல் நிலையத்தில், முகேஷ் குமாருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை போலீசார் ஒருவர் கழுத்தை நெறித்ததில் அவர் உயிரிழந்தார். ஜார்ஜின் இறப்புக்கு நீதி வேண்டி அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

rajasthan| George Floyed

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே