மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாய்க்கு ‘கரோனோ’ உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கோயில் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘கரோனா’ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

மதுரையில் நேற்று முன்தினம் வரை 50 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் டெல்லி நிகழ்வுக்கு சென்று வந்தவர்களுக்கும், அவர்களிடம், தொடர்பு இருப்பவர்களிடம் மட்டுமே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயது தாயிக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதனால், அர்ச்சகர் குடும்பத்தினர், கோயில் ஊழியர்கள், கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி ‘கரோனா’ பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அர்ச்சகர் தாய் ஊரடங்குக்கு பிறகு வெளியே செல்லவே இல்லை.

அர்ச்சகர் வீட்டிற்கு தினமும் வெளியே இருந்து ஒரு வேலையாள் வேலைக்கு வருவதாகவும், தற்போது அவரையும் இந்த பரிசோதனைக்கு உடப்படுத்தப்பட உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே