கொரோனா வைரஸ் உருவ பொம்மையை கொளுத்தி ஹோலி கொண்டாடிய மக்கள்

மும்பையில் ஹோலி பண்டிகையின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்ட உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

மும்பையின் வோர்லி பகுதியில் நேற்று ஹோலி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அப்போது சிறுவர், சிறுமிகள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், வண்ணப்பொடிகளை உடலில் பூசியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்நிலையில் கொரோனா என்று பெயரிடப்பட்ட ராட்சத உருவப்பொம்மையை வீதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.

பின்னர் தெர்மோகோலில் செய்யப்பட்ட ஊசியைப் பறக்கவிட்டு கொரோனா பொம்மையைத் தீயிட்டு எரித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே