ஜே.என்.யூ வன்முறைக்கு இந்து ரக்‌த தளம் பொறுப்பேற்பு!

ஜே.என்.யூ. வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்து ரக்‌த தளம் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜவல்ஹால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழகத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், கண்ணில் தென்பட்ட மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் அப்பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் உள்பட ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இந்த தாக்குலுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த நிலையில், ஜே.என்.யூ.வில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌த தளம் அமைப்பு பெறுப்பேற்றுள்ளது.

நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் அப்பல்கலைக்கழகத்தில் நடந்ததால் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அந்த அமைப்பின் பிங்கி சவுத்ரி தெரிவித்தார்.

One thought on “ஜே.என்.யூ வன்முறைக்கு இந்து ரக்‌த தளம் பொறுப்பேற்பு!

  • January 8, 2020 at 11:08 am
    Permalink

    இப்படி பதில் தாக்குதல் கொடுத்தால்தான் தேசிய விரோத சக்திகள் மற்றும் ஹிந்து மதத்திற்கு எதிராக அருவருப்பாக பேசுபவர்கள் பயப்படுவார்கள். அமைதியாக இருப்பார்கள் …இல்லையென்றால் தேச விரோதிகளின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். எனவே இது வரவேற்க வேண்டிய விசயமே. !! ஜெய் பராத் மாதாகி …

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *