டெல்லியில் வன்முறையை யார் தூண்டினாலும் கடும் நடவடிக்கை தேவை: கம்பீர்

வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாஜக மாநிலங்களவை எம்பியுமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன.

ஆனால் மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் வன்முறை பற்றி எரிகின்றது.

இதுவரை அந்த பகுதியில் நடந்த வன்முறை காரணமாக 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் நடந்து வரும் வன்முறை போராட்டத்திற்கு பாஜகவின் கபில் மிஸ்ரா வின் பேச்சுதான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்களை நிறுத்தாவிட்டால் போலீசார் பேச்சைக் கேட்காமல் அதிரடி நடவடிக்கையில் இறங்குவோம் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் மாநிலங்களவை எம்பி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கபில் மிஸ்ரா மீது எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே