இந்து கடவுள் குளிப்பதை காட்டுவதை போல உடைமாற்றுவதை மறைப்பது ஏன்..? விஜய்சேதுபதி சர்ச்சை பேச்சு..!

இந்து மத வழிபாட்டு நடைமுறைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மகா சபா சார்பில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மகா சபா அளித்திருக்கும் புகார் மனுவில்,  “தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.3.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார்.

அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்றுள்ளது.

அதில் இந்து மதக் கோயில்களின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றிக் கூற காரணம் என்ன?

இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா, ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்துக்களின் உணர்வை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மகா சபை கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே