துபாயில் இருந்து சிறப்பு விமானம் இன்று சென்னை வருவதையொட்டி, விமான நிலையத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா ஊரடங்கால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி, இன்று துபாயில் இருந்து 2 விமானங்களில் 400 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.
இதையொட்டி, விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
அப்போது விமானத்தில் வரும் பயணிகள் சுங்க மற்றும் குடியுரிமை சோதனைகளை முடித்த பின் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்திவிட்டு தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்படும் பயணிகளுக்கு சிகிச்சையளிக்கவும் மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி தனிமைப்படுத்த அறிவுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.