உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கின் முக்கிய நிகழ்வுகள்..

  • அயோத்தி வழக்கைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 2வது சனிக்கிழமை என்பதால் பள்ளி – கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவாக விடுமுறை தினமாக இருக்கும் என்பதால் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
  • உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் நடந்த 2வது விசாரணை இதுவாகும்.
  • ஆகஸ்ட் 6 தேதி தொடங்கி 40 நாட்களாக நடைபெற்ற விசாரணை கடந்த மாதம் 16ம் தேதி நிறைவடைந்தது.
  • கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி என்பவர் மாநில அரசின் நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 68 நாட்கள் தொடர் விசாரணை நடைபெற்றது. 
  • இந்த வழக்கில் ராம்லல்லா சார்பில் வாதாடிய தமிழகத்தைச் சேர்ந்த கே.பராசரன் 92 வயதானவர். இவரது முதுமையைக் கணக்கில் கொண்டு நீதிபதிகள் அமர்ந்து வாதிடும்படி கூறியும், இறுதிவரை நின்றுகொண்டே வாதிட்டார்.
  • இந்த வழக்கில் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெறாமல் வாதாடிய பராசரன், இதுவே கடைசி வழக்கு என்று அறிவித்திருந்தார்.
  • இவருடன் வாதாடிய வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் விசாரணையின்போது காலணி அணியாமலேயே வந்துள்ளார். 
  • பராசரனுக்கு உதவியாக இருந்த தேனி மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.வி. யோகேஸ்வரன் என்பவர் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வரை கோப்புகளைத் தயார் செய்து வந்தார்.
  • இதேபோல் சன்னி வக்பு வாரியம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இஜாஸ் மக்பூல் என்பவரின் உதவியாளராக இருந்த வழக்கறிஞர் அக்ரிதி சௌபே என்ற பெண் தனக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே